/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலையை கைப்பற்ற அ.தி.மு.க.,-தி.மு.க., பலப்பரீட்சை?நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி மோதலால் பரபரப்புஉடுமலையை கைப்பற்ற அ.தி.மு.க.,-தி.மு.க., பலப்பரீட்சை?நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி மோதலால் பரபரப்பு
உடுமலையை கைப்பற்ற அ.தி.மு.க.,-தி.மு.க., பலப்பரீட்சை?நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி மோதலால் பரபரப்பு
உடுமலையை கைப்பற்ற அ.தி.மு.க.,-தி.மு.க., பலப்பரீட்சை?நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி மோதலால் பரபரப்பு
உடுமலையை கைப்பற்ற அ.தி.மு.க.,-தி.மு.க., பலப்பரீட்சை?நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி மோதலால் பரபரப்பு
ADDED : செப் 23, 2011 09:59 PM
உடுமலை : உடுமலை நகராட்சி தலைவர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க., - தி.மு.க., நேரிடையாக மோதுகிறது.
நகராட்சியை கைப்பற்றி அனுபவம் உள்ள காங்., பா.ஜ., மற்றும் இதர கட்சிகளும் நகரத்தில் பலத்தை காட்ட தீவிரம் காட்டுவதால் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், 43 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு இதுவரை பொதுவாக இருந்ததால், இருபாலரும் பதவி வகித்துள்ளனர். இதில், 1996-01, 2001-06 ஆகிய காங்., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த இருபெண்கள் தலைவராக பொறுப்பு வகித்துள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை அடிப்படையில், நகராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை தலைவர் பதவி நேரடியாக வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்தது. உடுமலை நகராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவாக இருந்தது தற்போது பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களினால், இதுவரை உடுமலை நகராட்சியை கைப்பற்றாத அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக தற்போது இருக்கும் நிலையில் வரலாற்றை மாற்றும் முனைப்பில் பணிகளை துவக்கினர். இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கு தற்போது அ.தி.மு.க., நகரச் செயலாளர் சண்முகத்தின் மகள் சோபனாவை வேட்பாளராக அறிவித்தது. இதில், சில அதிருப்திகள் ஏற்பட்ட போதும் முதன்முறையாக நகராட்சியை கைப்பற்ற நிர்வாகிகள் முதற்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தி.மு.க., சார்பில், நகராட்சி தலைவர் பதவிக்கு சித்திரைச் செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளுமே இதுவரை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வந்தன. அதில், அ.தி.மு.க., நகராட்சியினை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுத்து வந்ததாலும், நகரத்தில் தி.மு.க., வின் ஓட்டுவங்கி போன்ற காரணங்களினால், நகராட்சியில் அ.தி.மு.க., ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி. மு.க., - தி.மு.க., நேரடியாக களமிறங்குவதால் உடுமலை நகரில் பரபரப்பு அதிகரித்துள்ளது. நேரடியாக மோதல்: உடுமலை நகராட்சியில், கடந்த 1986ம் ஆண்டு அ.தி.மு.க., - தி.மு.க., ஜனதாதளம் கட்சிகள் மோதின. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., நேரிடையாக மோதினாலும், ஜனதாதளம் கட்சி வெற்றி பெற்றது. கடந்த 1986ம் ஆண்டிற்கு பின் தற்போது தான் தி.மு.க., - அ.தி.மு.க., நேரிடையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இருகட்சிகளும் நகரத்தில் தங்கள் பலத்தை காட்ட பலப்பரீட்சையை துவக்கியுள்ளது. மற்ற கட்சிகளும் தயார் உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., காங்., பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இக்கட்சிகளில் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. ஏற்கனவே உடுமலை நகராட்சியை கைப்பற்றிய காங்., மற்றும் பா.ஜ., இம்முறை பல முனை போட்டி உள்ளதால் தங்கள் பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளன.