Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/சென்னையில் விடாது கொட்டியது கனமழை; எண்ணூரில் அதிகம்!

சென்னையில் விடாது கொட்டியது கனமழை; எண்ணூரில் அதிகம்!

சென்னையில் விடாது கொட்டியது கனமழை; எண்ணூரில் அதிகம்!

சென்னையில் விடாது கொட்டியது கனமழை; எண்ணூரில் அதிகம்!

UPDATED : டிச 02, 2025 10:01 AMADDED : டிச 02, 2025 09:40 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 260 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

எண்ணூர்- 260

பாரிஸ்- 254

ஐஸ் ஹவுஸ்- 224

மணலி புதுநகரம்- 206

பொன்னேரி- 206 பேசின் பிரிட்ஜ்- 197

மணலி- 183

வடபழனி- 182

மேடவாக்கம்- 177

கும்மிடிப்பூண்டி- 169

தொண்டையார்பேட்டை- 166

கத்திவாக்கம்- 165

நுங்கம்பாக்கம்- 161

சாலிகிராமம்- 160

சைதாப்பேட்டை- 156

துரைப்பாக்கம்- 156

பெரம்பூர்- 150

அமிஞ்சிக்கரை- 150

சோழவரம்- 140

நாராயணபுரம்- 139

அடையார்- 138

காசிமேடு- 133

வேளச்சேரி- 127

வளசரவாக்கம்- 121

மாதவரம்- 120

புழல்- 119

நெற்குன்றம்- 118

ராஜா அண்ணாமலைபுரம்- 117

கொரட்டூர்- 116

சோழிங்கநல்லூர்- 109

மடிப்பாக்கம்- 107

கண்ணகி நகர்- 105

மெட்ரோ சேவை

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி சென்ட்ரல் அருகே நின்றது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் தற்போது மெட்ரோ ரயில் சேவை சீரானது.

40 கி.மீ தொலைவில்.…!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.

தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தெற்கு நோக்கி நகர்கிறது.

விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து 6 உள்நாட்டு விமானங்களும், ஒரு சர்வதேச விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானங்கள் முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us