/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கிராமங்களில் "தாய்' திட்டம் அறிமுகம்கிராமங்களில் "தாய்' திட்டம் அறிமுகம்
கிராமங்களில் "தாய்' திட்டம் அறிமுகம்
கிராமங்களில் "தாய்' திட்டம் அறிமுகம்
கிராமங்களில் "தாய்' திட்டம் அறிமுகம்
ADDED : செப் 07, 2011 10:43 PM
திருப்புவனம் : கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து சிறிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட 'தாய்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருந்ததின் காரணமாக, மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி செல்கின்றனர். இதற்காக, நகர்புற வசதிகளை கிராமங்களில் கொண்டுவரும் நோக்கில், அரசு 'தாய்' திட்டத்தை (தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாடு) அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு கீழ் உள்ள குக்கிராமங்களை அடிப்படையாக கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.மாநிலத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், 12, 524 கிராம ஊராட்சிகளில் உள்ள 79,394 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. இவற்றை நான்கு வகைகளாக பிரித்து, 5 கிராமங்களுக்கு 20; 5 முதல் 15 கிராமங்களுக்கு 30; 16 முதல் 25 கிராமங்களுக்கு 40 லட்ச ரூபாய், 25 கிராமங்களுக்கு மேல் உள்ள ஊராட்சிகளுக்கு 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் 3,400 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கிராம ஊராட்சிகளை தேர்வு செய்வதற்காக, செப்.,9 முதல் 12ம் தேதி வரை ஆய்வு பணிகள் நடக்கிறது. இது குறித்து பி.டி.ஓ.,க்களுக்கு செப்.,12 முதல் 24ம் தேதி வரை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.