ADDED : செப் 19, 2011 10:49 AM
ஐதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நாளுக்குநாள் வலுக்கிறது.
ஆந்திரமாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால். அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன்றும் 24 பேருந்து நிலையங்களில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போராட்டக்குழுவினருடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்த தெலுங்கானா பகுதிக்கு குழு ஒன்றினை அனுப்பியுள்ளார்.


