/உள்ளூர் செய்திகள்/மதுரை/விபத்தில் பலியான மருத்துவபிரதிநிதி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடுவிபத்தில் பலியான மருத்துவபிரதிநிதி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு
விபத்தில் பலியான மருத்துவபிரதிநிதி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு
விபத்தில் பலியான மருத்துவபிரதிநிதி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு
விபத்தில் பலியான மருத்துவபிரதிநிதி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு
ADDED : செப் 17, 2011 03:11 AM
மதுரை : விபத்தில் பலியான மருத்துவப்பிரதிநிதி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க மதுரை முதலாவது விரைவு கோர்ட் உத்தரவிட்டது.மதுரை மேலூர் பட்டூரைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் அம்மாவாசி.
இவர் மருந்து கம்பெனி ஒன்றில் பிரதிநிதியாகவும், மருந்துக்கடையும் வைத்துள்ளார். 10.2.2004 ல் இவர் டூவீலரில் மதுரையில் இருந்து மேலூர் சென்றார். கத்தப்பட்டி அருகில் எதிரே வந்த மாருதி வேன் மோதி படுகாயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். நஷ்டஈடு கோரி மேலமாசி வீதி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மண்டல மேலாளர் மீது இவரது தந்தை ஒச்சாத்தேவர் கோர்ட்டில் மனு செய்தார்.நீதிபதி பி.பொன்பிரகாஷ், ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 850 ஐ உரிய வட்டியுடன் நஷ்டஈடாக வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.