'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்
UPDATED : ஜூன் 22, 2024 12:10 PM
ADDED : ஜூன் 22, 2024 01:04 AM

சென்னை: தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விருப்பமான பாடப்பிரிவுகளில் சேர்வது குறித்து விளக்கம் அளிக்கும், 'தினமலர்' கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் இன்று(ஜூன் 22) இரண்டு இடங்களில் நடைபெற்றது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், முதலாம் ஆண்டில் சேர்வதற்கான 'ஆன்லைன் கவுன்சிலிங்' அடுத்த மாதம் நடக்கிறது.
இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், ஆன்லைன் கவுன்சிலிங்கில், தங்களுக்கு தேவையான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெறுவது எப்படி; 'சாய்ஸ் பில்லிங்' முறையில் பாடப்பிரிவுகளை வரிசைப்படுத்தும் முறை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, இன்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை, தி.நகர் சர்.பிட்டி தியாகராயா அரங்கிலும், பிற்பகல், 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள டி.ஜி.பி.கல்யாண மண்டபத்திலும் நடைபெற்றது.
தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின் செயலர், பேராசிரியர் புருஷோத்தமன் பங்கேற்று, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் நடைமுறைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர உள்ளார்.
இன்ஜினியரிங்கில் வேலை வாய்ப்புகள் மிகுந்த பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் ஆலோசனை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை.