Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விண்ணேற்பு அன்னை ஆலயம்

விண்ணேற்பு அன்னை ஆலயம்

விண்ணேற்பு அன்னை ஆலயம்

விண்ணேற்பு அன்னை ஆலயம்

ADDED : செப் 03, 2011 01:55 AM


Google News

புதுச்சேரி : 'புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தை சுற்றுலா தலமாக அறிவித்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியை மேம்படுத்த வேண்டும்' என, ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., கூறினார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:ஓம்சக்தி சேகர்: நெல்லித்தோப்பில் அமைந்துள்ள, உலக பிரசித்திப் பெற்ற, பழமைவாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலத்தை சுற்றுலா தலமாக அறிவித்து, ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றி, சாலையோரங்களில் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா...அமைச்சர் ராஜவேலு: சுற்றுலாத் துறை மூலம் இந்த ஆலயத்தில், கடந்த 2003ம் ஆண்டில், ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தைச் சுற்றியுள்ள இடங்கள், சாலைகளை மேம்படுத்தும் திட்டம் சுற்றுலாத் துறையில் இல்லை. அதைச் சம்பந்தப்பட்ட வேறு துறைதான் செய்ய வேண்டும்.ஓம்சக்தி சேகர்: ஏனாமில் புத்தர் சிலை அமைக்க பல கோடி ரூபாய் செலவு செய்கிறீர்கள். புகழ்பெற்ற ஆலயத்தைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றர். ஆலயத்தைச் சுற்றிலும் சிமென்ட் சாலை அமைத்து தர முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்...அமைச்சர் ராஜவேலு: ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.முதல்வர் ரங்கசாமி: அந்த ஆலயத்தை சுற்றிலும் என்ன செய்யலாம் என எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினால் செய்யலாம். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிமென்ட் சாலை அமைக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us