/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை
ADDED : செப் 22, 2011 12:40 AM
திருநெல்வேலி : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.,வுடன் தொடர்ந்து இந்திய கம்யூ., குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று மாநில இந்திய கம்யூ., செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி மற்றும் சீட் ஒதுக்கீடு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தை நடக்கும் போது அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்தது தொடர்பாக அவர்களிடம்தான் கேட்க வேண்டும். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து உடனடியாக அணு மின் நிலையத்தை மூட வேண்டும். இதே போல், அகில இந்திய அளவில் செயல்படும் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூட வேண்டும். அணு உலைகளை விட பயங்கரமான அணு குண்டுகள் தயாரிப்பதையும் கைவிட வேண்டும். அணு மின் நிலைய பிரச்னை தொடர்பான போராட்டங்களின் பின்னணியில் சில சக்திகளும் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவுடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தை நாங்கள் மட்டுமே எதிர்த்தோம். அப்போது இதுதொடர்பாக மக்களிடையே போதுமான விழிப்புணர்வு எழவில்லை. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக பார்லிமென்டில் சிறப்பு கூட்ட தொடரை நடத்தி நிபுணர்கள், அனைத்து கட்சியினர், ஊழல் எதிர்ப்பு குழுவினர் ஆலோசனைகளை பெற்று இறுதியில் பார்லிமென்ட் முடிவின்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சாதி, மத மோதல்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சர்வ கட்சியினர், ஓய்வு பெற்ற நீதிபதிகள், நிபுணர்கள் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு கடந்த திமுக ஆட்சியால் 1.14 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. மின்வாரியத்தின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கோடியும், போக்குவரத்து துறை மூலம் 18 ஆயிரம் கோடியும் கடன் பெறப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். இதற்கு எம்.பி.,க்கள் பார்லிமென்டில் நிதி பெற்று தர வேண்டும். இந்திய கம்யூ., மாவட்ட மாநாடு வரும் ஜனவரி மாதம் புளியங்குடியிலும், மாநில மாநாடு வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் ராஜபாளையத்திலும், அகில இந்திய மாநாடு வரும் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பாட்னாவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில செயலாளர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சண்முகவேல், சேவியர் ஆகியோரும் உடனிருந்தனர்.


