/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/திருவள்ளுவர் அரசு கல்லூரிகோகோ போட்டியில் வெற்றிதிருவள்ளுவர் அரசு கல்லூரிகோகோ போட்டியில் வெற்றி
திருவள்ளுவர் அரசு கல்லூரிகோகோ போட்டியில் வெற்றி
திருவள்ளுவர் அரசு கல்லூரிகோகோ போட்டியில் வெற்றி
திருவள்ளுவர் அரசு கல்லூரிகோகோ போட்டியில் வெற்றி
ADDED : செப் 22, 2011 02:31 AM
ராசிபுரம்: சேலம் பெரியார் பல்கலை அளவிலான ஆண்கள் கோகோ போட்டி, ராசிபுரம்
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த
போட்டியில், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு
மாவட்டங்களில் இருந்து, 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
போட்டிகளை,
பல்கலை உடற்கல்வி இயக்குனர் அங்கமுத்து துவக்கி வைத்தார்.போட்டியில்,
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல் பரிசும், நாமக்கல்
செல்வம் கலை அறிவியல் கல்லூரி இரண்டாமிடமும், சேலம் கணேஷ் கலை அறிவியல்
கல்லூரி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லூரி வணிகவியல்
துறை தலைவர் கணேசன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில்,
கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், உதவிப் பேராசிரியர் சிவக்குமார், கல்லூரி
உடற்கல்வி இயக்குனர் ராஜகோபால், உடற்கல்வி இயக்குனர்கள் மீனாட்சிசுந்தரம்,
சிவக்குமார், தியாகராஜன், குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.