விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஒய்ந்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஒய்ந்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஒய்ந்தது
ADDED : ஜூலை 08, 2024 06:36 PM

விழுப்புரம்:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிந்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், நாளை மறுதினம்(ஜூலை 10) இடைத்தேர்தல் நடக்கிறது. 276 ஓட்டுச்சாவடிகளில், 2.34 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., வேட்பாளர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால், தி.மு.க, - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என, மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தீவிரமாக நடைபெற்று வந்த பிரசாரம் இன்று மாலை ஓய்ந்தது. நாளை மறுநாள் (ஜூலை10-ம் தேதி) தேர்தல் நடக்கிறது.