பாம்பன் பாலம் தூண்களில் சேதம் விரைவில் சீரமைக்கப்படுமா
பாம்பன் பாலம் தூண்களில் சேதம் விரைவில் சீரமைக்கப்படுமா
பாம்பன் பாலம் தூண்களில் சேதம் விரைவில் சீரமைக்கப்படுமா
ADDED : ஆக 30, 2011 10:54 PM

ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் சேதமடைந்து வரும் தூண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாம்பன் பாலம் கட்டப்பட்டு, 200 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இத்தூண்களின், மேற்பகுதி மற்றும் கைப்பிடி தடுப்பு சுவர்களில், விரிசல் ஏற்பட்டுள்ளது. தூண்களில் சிமென்ட் பூச்சு, பெயர்ந்து விழுந்து வருகிறது. தூண்களிலுள்ள இரும்பு கம்பிகள், உப்புக் காற்றால் துருப்பிடித்து, சேதமடையும் நிலை உருவாகி வருகிறது. உலகிலேயே, அதிகம் துருப்பிடிக்கும் பகுதி, மண்டபம் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இங்குள்ள கடல் காற்றில், உப்புத் தன்மை அதிகம். பலமுறை பாலத்தை பார்வையிட்டு சென்ற இன்ஜினியர்கள், விரைவில் பராமரிப்புப் பணிகள் துவங்கப்படும் என்று, கூறிச் செல்கின்றனர்; இதுநாள் வரை, பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை. பாலத்தை விரைவில் சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


