/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போதைக்கு அடிமையான தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைதுபோதைக்கு அடிமையான தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது
போதைக்கு அடிமையான தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது
போதைக்கு அடிமையான தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது
போதைக்கு அடிமையான தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது
ADDED : ஆக 23, 2011 01:03 AM
அரூர்: அரூர் அருகே போதைக்கு அடிமையான தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (60). இவரது மனைவி முருகம்மாள் (55). இவர்களது மகள் தீர்த்தகிரி (23). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். ராஜேந்திரனுக்கு குடிப்பழகம் இருந்தது. அடிக்கடி மது குடித்துவிட்டு போதையில் தெருவில் படுத்து விடுவார். தீர்த்தகிரி சென்று அவரை வீட்டுக்கு அழைத்து வருவார். தந்தை மது குடிப்பதால் தீர்த்தகிரி அவமானம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு ரஜேந்திரன் பால் வழங்கிய 1,000 ரூபாய் வாங்கி வந்துள்ளார். அதில், 750 ரூபாயை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து செலவு செய்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் ராஜேந்திரன் நரிப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தார். மகன் தீர்ததகிரியிடம் சிலர் உனது தந்தை போதையில் பஸ் ஸ்டாண்டில் படுத்து இருப்பதாக கூறினர். ஆத்திரத்துடன் அங்கு சென்ற தீர்த்தகிரி அருகில் இருந்த கல்லை தூக்கி ராஜேந்திரன் மீது போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனை அடக்கம் செய்வதற்காக அவரது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்த கோட்டப்பட்டி போலீஸார் பிணத்தை கைப்பற்றி தீர்த்தகிரியை கைது செய்தனர்.