லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்
லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்
லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்
ADDED : ஆக 23, 2011 01:13 AM
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே யானைக்கல் என்னுமிடத்தில் முன்னால் சென்ற லாரியை, டிராவல்ஸ் பஸ் கடக்க முயன்றபோது, லாரியின் மீது பஸ் மோதியதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யானைக்கல் என்னுமிடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணியளவில் திருச்சியிலிருந்து லாரி மதுரை சென்றது. சென்னையிலிருந்து மதுரை சென்ற சிட்டி எக்ஸ்பிரஸ் டிராவல்ஸ் பஸ் லாரியை முந்தி செல்ல முயன்றபோது, லாரியின் மீது டிராவல்ஸ் பஸ் மோதிவிட்டது. இதில், டிராவல்ஸ் பஸ்ஸில் பயணம் செய்த சேடப்பட்டி சித்ரன் மகன் மாதவன்(28), தஞ்சாவூர் அஸ்ரப் அலி மகள் பத்ரியா(18), மதுரை தனபால் மகன் ஸ்ரீதர்(33), திருவெல்வேலி செல்லத்துரை மகன் கோதண்டராமன்(29), விருதுநகர் தேவராஜ் மகன் விஜய்(29) ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். மாதவன், ஸ்ரீதர், கோதண்டராமன் ஆகிய மூவரும் திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையிலும், விஜய் திருச்சி அரசு மருத்துவமனையிலும், பத்ரியா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, வளநாடு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பால்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்த, இந்த விபத்திற்கு காரணமான சிட்டி எக்ஸ்பிரஸ் டிராவல்ஸ் பஸ் டிரைவர் உதயகுமார்(52) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.