இந்தியாவை கைவிட முடியுமா ஆப்பிள் நிறுவனம்?
இந்தியாவை கைவிட முடியுமா ஆப்பிள் நிறுவனம்?
இந்தியாவை கைவிட முடியுமா ஆப்பிள் நிறுவனம்?

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடு, அதை விடுத்து, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஆலையை அமெரிக்காவில் அமைக்க ஆப்பிள் நிறுவனம் முன்வர வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
அடுத்த முறை சற்று கடுமை காட்டியுள்ள அதிபர் டிரம்ப், தனது சமூகவலைதள பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டார். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். ஆனால் இன்னும் குக் இதற்கு பதிலளிக்கவில்லை.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை, டிரம்ப் பலமுறை எச்சரித்தும், இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் குக் இன்னும் உறுதியாக இருக்க காரணங்கள் உண்டு.சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்ததால், அங்கு தயாரிக்கப்பட்டு வரும் ஆப்பிள் ஐபோன் மாடல்களை, இந்தியாவுக்கு இடம் மாற்ற ஏற்கனவே டிம் குக் திட்டமிட்டிருந்தார்.
ஏற்கனவே, பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய ஆலைகளில் ஐபோன் அசெம்பிளிங் நடைபெற்று வருகிறது. தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், பல்வேறு ஐபோன் மாடல்களை இந்தியாவில் தயாரிக்க அவர் முடிவெடுத்திருந்தார். அமெரிக்காவில் விற்கப்போகும் அனைத்து ஐபோன்களும் இந்தியாவில் தயாரித்தவையாக இருக்கும் என்று டிம் குக் கூறியது, டிரம்பை பெரிதும் அசைத்து விட்டது.
லாபத்தை இழப்பதா?
ஒரு ஐபோனுக்கு சராசரியாக ஆப்பிள் நிறுவனம் தற்போது 450 டாலர் லாபம் ஈட்டுகிறது. அமெரிக்காவுக்கு உற்பத்தியை மாற்றினால், அதன் லாபம் 60 டாலராகக் குறையும். எனவே, லாபத்தில் பெருமளவை இழக்க தயாராக இல்லாத ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்க தயங்குகிறது.
இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பல்வேறு அழுத்தங்களை தாக்குப் பிடித்து, இந்தியாவில் தன் முதலீட்டை ஆப்பிள் உறுதிப்படுத்தி, உற்பத்தியை துவங்கினால், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பாக அமையும்.
இந்தியாவில் செலவு குறைவு
டிரம்ப் வரி விதித்தாலும் கூட, இந்தியாவில் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்வது, அமெரிக்காவில் தயாரிப்பதைவிடசெலவு குறைவே என, ஆப்பிள் நிறுவனம் கணக்கிடுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா வழங்கும் ஊக்கத் தொகை, சிறப்பான வினியோகத் தொடர், ஏற்கனவே செய்துள்ள அதிக முதலீட்டில் செயல்படும் ஆலைகள், குறைந்த ஊதியச் செலவு ஆகியவை ஆப்பிளுக்கு சாதகமான விஷயங்கள் மாறாக, அமெரிக்காவில் இடத்தின் விலை, அதிக ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் இல்லாத நிலை ஆகியவை ஐபோன் தயாரிப்பு செலவை அதிகரிக்கும். இதை கணக்கிட்டால், இந்தியாவில் தயாரித்து 25 சதவீத இறக்குமதி செலுத்திய பிறகும், அமெரிக்காவில் ஐபோன் விலை குறைவாகவே இருக்கும் என, ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.

எங்கு, எது தயாராகிறது?