/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தானிய அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 3.75 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடுதானிய அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 3.75 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு
தானிய அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 3.75 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு
தானிய அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 3.75 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு
தானிய அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 3.75 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 25, 2011 12:19 AM
உளுந்தூர்பேட்டை : ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருநாவலூர் வட்டத்தில் 3.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் விரிவாக்க மையங்களில் ஏடிடி-39, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சம்பா மசூரி, ஏடிடி-37 ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அவைகள் ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. நெல் பயிரில் கூடுதல் மகசூல் பெறுவதற்காக நுண்ணுயிர் பொட்டலங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இடுபொருட்களை பெற வரும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களின் பரிந்துரை விண்ணப்பத்தை பெற்று வர வேண்டும். நேரடியாக வேளாண் விரிவாக்க மையத்திற்கு வரும் விவசாயிகள், இருப்பிட சான்று(குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை), நிலச் சான்று(சிட்டா, அடங்கல், பட்டா) போன்றவற்றை எடுத்து வர வேண்டும். விவசாய அடையாள அட்டை கொண்டு வந்தும், இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.