முதலிரவு அறையில் புதுப்பெண் தற்கொலை
முதலிரவு அறையில் புதுப்பெண் தற்கொலை
முதலிரவு அறையில் புதுப்பெண் தற்கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் திருமணமான நாளன்று முதலிரவு அறையில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதலிரவு அறையில் தற்கொலை: அங்கு, கணவர் ராம்குமாருடன் முதலிரவு அறைக்குள் சென்ற வள்ளியம்மாள், சிறிது நேரத்தில் வெளியே வந்து தாயார் பஞ்சவர்ணத்திடம் தனக்கு தலைவலிப்பதாகக்கூறியுள்ளார். பின்னர் மீண்டும் நள்ளிரவு 11.30 மணிக்கு அந்த அறைக்குள் சென்று தனியாக படுத்து தூங்கிய வள்ளியம்மாள், நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென வாந்தியெடுத்து மயங்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் விஷம் குடித்திருந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். தென்பாகம் போலீசார் விசாரணையில், வள்ளியம்மாள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எப்போது விஷம் குடித்தார் எனத்தெரியவில்லை.
சோகத்துடன் காணப்பட்ட வள்ளியம்மாள்: வள்ளியம்மாளுக்கும், ராம்குமாருக்கும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால், அப்போதோ அல்லது அதன்பின்னரோ அவர் தனது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவரது உறவினர்கள் கூறினர். மேலும், திருமணத்தன்று மணமேடையில் உற்சாகமான மனநிலையில் இல்லாமல், ஏதோ ஒன்றை இழந்த சோகத்துடன் வள்ளியம்மாள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூச்சிறைப்பு உள்ளிட்ட நோயால் அவதிப்பட்ட வள்ளியம்மாள், மணவாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியாது என முடிவெடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரித்துவருகின்றனர். சப்கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானும் விசாரிக்கிறார்.