/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆசிரியர் நல கூட்டணி பட்ஜெட்டுக்கு பாராட்டுஆசிரியர் நல கூட்டணி பட்ஜெட்டுக்கு பாராட்டு
ஆசிரியர் நல கூட்டணி பட்ஜெட்டுக்கு பாராட்டு
ஆசிரியர் நல கூட்டணி பட்ஜெட்டுக்கு பாராட்டு
ஆசிரியர் நல கூட்டணி பட்ஜெட்டுக்கு பாராட்டு
ADDED : ஆக 07, 2011 01:34 AM
செஞ்சி : தமிழக அரசின் பட்ஜெட்டுக்குஅண்ணா ஆசிரியர் நல கூட்டணி பொது செயலாளர் குப்புதாசு பாராட்டு தெரிவித் துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழக அரசின் பட்ஜெட்டில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 1,500 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு 2,000 ரூபாயும், பள்ளி குழந்தைகளுக்கு 4 செட் இலவச சீருடையும், 6ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முழு கால் சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கம்மீசும், மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற அறிவிப்பும், அடித்தட்டு மக்களுக்கு அத்தியாவசிய இலவச பொருட்கள் வழங்கும் திட்டமும் வரவேற்க தகுந்தது.இத்துடன் 173.87 கோடி ரூபாய் உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்கு உரியது.