கனமழையை பொருட்படுத்தாத அன்னா ஆதரவாளர்கள்
கனமழையை பொருட்படுத்தாத அன்னா ஆதரவாளர்கள்
கனமழையை பொருட்படுத்தாத அன்னா ஆதரவாளர்கள்
UPDATED : ஆக 24, 2011 10:40 AM
ADDED : ஆக 24, 2011 10:19 AM
புதுடில்லி: டில்லியில் கனமழை பெய்த போதிலும் அதை பொருட்படுத்தாமல், அன்னா ஹசாரேவுடன் அவரது ஆதரவாளர்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அங்கு வாத்திய இசைகளுடன் தேசபற்று பாடல்களும், தேச பற்று கோஷங்களும் பலமாக எழுந்து வருகின்றன. இதுகுறித்து அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் அரியானாவைச் சேர்ந்த பிவானி என்பவர் கூறுகையில், தாங்கள் அன்னாவுடன் இணைந்து கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், அன்னாவின் கோரிக்கைகளை மத்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.