"நீதித் துறை பொறுப்பு மசோதா விரைவில் பார்லியில் தாக்கல்'
"நீதித் துறை பொறுப்பு மசோதா விரைவில் பார்லியில் தாக்கல்'
"நீதித் துறை பொறுப்பு மசோதா விரைவில் பார்லியில் தாக்கல்'
ADDED : செப் 27, 2011 01:10 AM

புதுடில்லி : 'நீதிபதிகளை விசாரிக்க வழி செய்யும் நீதித் துறை பொறுப்புடைமை மசோதா விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இது குறித்து கூறியதாவது: சமீப காலமாக நீதிபதிகள் மீதான புகார்கள் அதிகம் வருவதால் அவர்களை விசாரிக்க வழி செய்யும் நீதித் துறை பொறுப்பு மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் சீர்திருத்தம் குறித்து முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அதன் பிறகு, தேர்தல் சீர்திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கலாகும்.
நீதித் துறை தரம் மற்றும் பொறுப்பு மசோதாவுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முறைகேடாக நடக்கும் நீதிபதிகளை பதவியிறங்கச் செய்ய, அதிகாரம் படைத்த ஐவர் கமிட்டி இந்த மசோதா மூலம் அமைக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மற்றும் அட்டர்னி ஜெனரல், ஐகோர்ட் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட வல்லுனர் ஆகியோர் இந்த ஐவர் குழுவில் இடம் பெறுவர். இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.