/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேகமாக சென்ற பள்ளி வேன்: டிரைவரை எஸ்.பி., கண்டித்தார்வேகமாக சென்ற பள்ளி வேன்: டிரைவரை எஸ்.பி., கண்டித்தார்
வேகமாக சென்ற பள்ளி வேன்: டிரைவரை எஸ்.பி., கண்டித்தார்
வேகமாக சென்ற பள்ளி வேன்: டிரைவரை எஸ்.பி., கண்டித்தார்
வேகமாக சென்ற பள்ளி வேன்: டிரைவரை எஸ்.பி., கண்டித்தார்
காரைக்கால் : காரைக்காலில் விபத்து ஏற்படுத்தும் விதமாக பள்ளி வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய டிரைவரை எஸ்.பி., வெங்கடசாமி கண்டித்தார்.காரைக்காலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளாகி 33 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
நேற்று மதியம் 1.45 மணிக்கு எஸ்.பி., வெங்கடசாமி தனது ஜீப்பில் அலுவலகத்திற்கு பாரதியார் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். லெமர் வீதியில் இருந்து பி.ஓய்.02 4469 எண்ணுடைய தனியார் பள்ளி வேன் திடீரென பாரதியார் சாலையில் புகுந்தது. எஸ்.பி., ஜீப் டிரைவர் பள்ளி வாகனத்தின் மீது மோதால் இடதுபுறமாக வளைத்து வண்டியை நிறுத்தினார்.இதைக் கண்டு அதிர்ந்த போலீஸ் எஸ்.பி.,வெங்கடசாமி, பள்ளி வேன் டிரைவரை அழைத்து, குழந்தைகள் ஏற்றிச் செல்லும் வாகனத்தை ஓட்டும் நீங்கள், எப்படி நடத்து கொள்வது என்று தெரியாததா? சாலையில் குறுக்கிடும் போது எதிர் வரும் வாகனங்களை பார்ப்பது இல்லையா? என கண்டிதார். பின் குழந்தைகளை இறக்கிவிட்டு வண்டியை காவல் நிலையம் கொண்டுர செல்லி அங்கிருந்து புறப்பட்டார்.