ADDED : ஆக 24, 2011 12:05 AM
புதுச்சேரி : லாரிகள் ஸ்டிரைக் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
தென் மாநில லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் புதுச்சேரி மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தேவையான காய்கறிகளின் பெரும் பகுதி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது. லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 16 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் தற்போது 20 ரூபாய்க்கும், 20 ரூபாய் விற்ற கேரட் 24 ரூபாய்க்கும், இஞ்சி, சேம்பு, வெள்ளரி, குடைமிளகாய், சின்னவெங்காயம், கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் தலா 2 ரூபாய் வரை உயர்ந்துள் ளது. சில்லரை விலையில் 7 ரூபாய்க்கு விற்ற தக்காளி 14 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.