Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தனசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: நிலமோசடி அதிகரித்ததால் போலீஸ் அதிரடி

தனசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: நிலமோசடி அதிகரித்ததால் போலீஸ் அதிரடி

தனசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: நிலமோசடி அதிகரித்ததால் போலீஸ் அதிரடி

தனசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: நிலமோசடி அதிகரித்ததால் போலீஸ் அதிரடி

ADDED : செப் 17, 2011 10:51 PM


Google News
Latest Tamil News

சென்னை: சென்னையில் பல்வேறு நிலமோசடி வழக்குகளில் சிக்கிய, தி.மு.க., பகுதிச் செயலர் தனசேகரன், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.



நிலமோசடி தொடர்பாக, சென்னையில் தற்போது பரவலாக மனுக்கள் பெறப்பட்டு, உண்மையான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்திருந்ததாக, மாஜி எம்.எல்.ஏ., ரங்கநாதன், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சென்னை கே.கே.நகர் பகுதியில் கோலோச்சி வந்த, பகுதிச் செயலர் தனசேகரன் மீது, அடுக்கடுக்காக புகார்கள் குவியத் துவங்கின.



கோவை, 'பாசி' நிதி நிறுவன வழக்கு தொடர்பாக, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சென்னை வந்து தனசேகரனைத் தேடினர். அன்றே அவர் தலைமறைவானார். இதற்கிடையில், பரமேஸ்வரி என்பவர், வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அவருக்குச் சொந்தமான, 15 கோடி நிலம் தொடர்பாக, நிதி நிறுவனத்துடன் பிரச்னை ஏற்பட்டு, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தது. தனசேகரன் தன் அடியாட்களுடன் நுழைந்து, நிலத்தை ஆக்கிரமித்ததாக, வடபழனி போலீசில் கடந்தாண்டில் புகார் அளித்தும் ஏற்கப்படாததால், இந்தாண்டு ஆக., 3ம் தேதி, மீண்டும் புகார் அளித்தார். புகாரின்படி வழக்குப் பதிந்து, செப்., 6ம் தேதி, தனசேகரன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது, எம்.ஜி.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில், ராஜி, ஜார்ஜ், கலைவாணன் ஆகியோரும், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில், ஜீவானந்தம், அனுராதா ஆகியோரும், தங்களது இடம், வீடு, கட்டடத்தை தனசேகரன் முறைகேடாக ஆக்கிரமித்ததாக, புகார் அளித்தனர்.



இவ்வாறு, தனசேகரன் மீது, பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எம்.ஜி.ஆர்., நகர் இன்ஸ்பெக்டர், கமிஷனர் திரிபாதிக்கு பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று, தனசேகரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கே.கே.நகர் மகளிர் அணி முன்னாள் செயலர் பால்மலர் கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணையை மீண்டும் துவங்கியுள்ளதால், அதிலும் இவர் விசாரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.



புகார் அளித்தவர்கள் விவரம்:



வடபழனி: * புகார்தாரர்: பரமேஸ்வரி. வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள 15 கோடி ரூபாய் நிலத்தை ஆக்கிரமித்தது.



எம். ஜி.ஆர்., நகர்: *ராஜி மேற்கு ஜாபர்கான்பேட்டையில் உள்ள வீட்டை, அடியாட்களுடன் ஆக்கிரமித்தது.



*ஜார்ஜ் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள கட்டடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது



* கலைவாணன் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள கட்டடத்தை தனசேகரன், அடியாட்களுடன் ஆக்கிரமித்துக் கொண்டது.



கே.கே.நகர்: * ஜீவானந்தம், பொறியியல் பட்டதாரி ராமாவரம், ராயலா நகரில் உள்ள தன் இடத்தை ஆக்கிரமித்தது.



* அனுராதா கே.கே.நகர், திருவள்ளுவர் காலனியில் உள்ள வீட்டை ஆக்கிரமித்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us