Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கரிவலம்வந்தநல்லூர் கோயில் ராஜகோபுர பணி தீவிரம்

கரிவலம்வந்தநல்லூர் கோயில் ராஜகோபுர பணி தீவிரம்

கரிவலம்வந்தநல்லூர் கோயில் ராஜகோபுர பணி தீவிரம்

கரிவலம்வந்தநல்லூர் கோயில் ராஜகோபுர பணி தீவிரம்

ADDED : ஜூலை 24, 2011 01:34 AM


Google News

திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதசுவாமி கோயிலில் புதிய ராஜகோபுர திருப்பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் இறுதி நிலை கட்டுமானப் பணி துவக்க விழா நடந்தது.பழம்பெருமை வாய்ந்த சரித்திர புகழ்மிக்க பல்வேறு சிறப்புகளை கொண்ட கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெருங்குறையாக இருந்து வந்தது.

இந்நிலையில் இங்கு புதிய ராஜகோபுரம் கட்ட ஆர்.வி.எஸ். துரைராஜ் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.மேலும் உபயதாரர்களால் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்ட திட்டமிடப்பட்டது.



இதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி புதிய ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி ராஜகோபுர கட்டுமானப்பணி துவக்க விழா நடந்தது.திருப்பணிக்குழு தலைவர் ஆர்.வி.எஸ்.துரைராஜ் மற்றும் திருப்பணிக் குழுவினர் உபயதாரர்கள் முயற்சியால் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் சேர்மன் ராமசாமி ஒத்துழைப்புடன் மைசூர் மகாதேவர் கருங்கல் திருப்பணி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுர திருப்பணி உட்பட பல்வேறு கோயில்களில் நிர்மானப் பணிகளை சிறப்பாக செய்த தென்காசி ஸ்தபதி விநாயகமூர்த்தி இக்கோயில் ராஜகோபுர நிர்மான பணியை துவக்கி நடத்தி வருகிறார்.ஐகோர்ட் வக்கீல் கதிர்வேல் உபயத்தில் தற்போது 8வது நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது.



இறுதி பணிக்கான கணபதி ஹோமத்தை கடந்த 14ம் தேதி காலை அர்ச்சகர்கள் பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி நடத்தினர். திருப்பணிக்குழு தலைவர் துரைராஜ் ஸ்தபதி, விநாயகமூர்த்தி ஆகியோர் 9வது நிலை கட்டுமான பணியை துவக்கினர்.கரிவலம்வந்தநல்லூர் பஞ்.,தலைவர் பால்ராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனியாண்டி, ஓய்வு விஏஓ பால்நாராயணன், பெருமாள்பிள்ளை, சர்சிகல் காட்டன் மில் ராமசுப்பிரமணியன், அரிகரன்பிள்ளை, வையாபுரி, ஓய்வு விஏஓ மணிமாறன், சண்முகவேல், திருமலைகுமாரசாமி, வக்கீல் முனியசாமி, மெடிக்கல் கந்தன், முருகன், முருகேசன் மற்றும் பாலையாதேவர், செல்வம், கதிர்காமன், குருசாமி, கோயில் மணியம் வீரகுமார், ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us