/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரசு கேபிள் "டிவி' நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு அழைப்புஅரசு கேபிள் "டிவி' நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அரசு கேபிள் "டிவி' நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அரசு கேபிள் "டிவி' நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அரசு கேபிள் "டிவி' நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
ADDED : செப் 07, 2011 12:03 AM
சிவகங்கை : சிவகங்கையில் அரசு கேபிள் 'டிவி' நிறுத்தப்பட்டது.
ஆப்பரேட்டர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பை சென்னையில் முதல்வர் 'ஜெ' செப்.2ம் தேதி துவக்கி வைத்தார். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஒளிபரப்பை துவக்கி வைத்தனர். சிவகங்கையில் காங்சிரங்கால் அருகே அரசு கேபிள் 'டிவி' மையத்தை கலெக்டர் ராஜாராமன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் அழைக்கப்பட்டும்,இதில் கலந்து கொள்ளாமல் சிலர் புறக்கணித்தனர். பின்னர் இவர்களை அதிகாரிகள் அழைத்து பேசி ஒளிபரப்பை தொடர வலியுறுத்தினர்.சிவகங்கை பகுதியில் சில சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒளிபரப்பு துவங்கியது முதல் பொதுமக்கள் அனைத்து சேனல்களும் தெரியவில்லை என கேபிள் ஆப்பரேட்டர்களிடம் முறையிட்டனர். அரசு அறிவித்துள்ள 90 சேனல்கள் மட்டுமே தெரியும் என விளக்கம் தெரிவித்தும் பொதுமக்கள் அனைத்து சேனல்களும் தெரியவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.நேற்று இரவு கேபிள் ஆப்பரேட்டர்கள் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்புபை துண்டித்து விட்டு மீண்டும் பழைய கேபிள் இணைப்புகளை வழங்கினர்.கலெக்டர் ராஜராமன் கூறுகையில், '' கேபிள் ஆப்பரேட்டர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளோம். அவர்களிடம் பேசி மீண்டும் அரசு கேபிள் 'டிவி' தெரிய ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.