Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சாதனை விழா இல்லை; பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது: அரசின் விழாவை விமர்சித்த சீமான்

சாதனை விழா இல்லை; பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது: அரசின் விழாவை விமர்சித்த சீமான்

சாதனை விழா இல்லை; பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது: அரசின் விழாவை விமர்சித்த சீமான்

சாதனை விழா இல்லை; பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது: அரசின் விழாவை விமர்சித்த சீமான்

UPDATED : செப் 26, 2025 01:39 PMADDED : செப் 26, 2025 12:42 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''கல்வியில் சிறந்த தமிழகம் விழா, கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை. பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழக அரசின் கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை. பாடல் வெளியீட்டு விழா போன்று இருந்தது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்த பேரறிஞர்களா பங்கேற்றனர்? கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேச வைக்கப்படாதது ஏன்? திரைப்பட பாடல் வெளியீட்டு விழா போல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடைபெற்றுள்ளது. கல்வியில் சிறந்தவர்கள் நாட்டில் இல்லையா? அவர்களை பேச வைக்க வேண்டியது தான்.

விளம்பர மாடல்

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல; விளம்பர மாடல். அவர்களுக்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் தவிர வேற என்ன தெரியும். கழிவறையை தமிழக அரசு பள்ளி இருக்கிறது. கல்வியில் சிறந்த தமிழகம் என்றால் எதில் சிறந்து இருக்கிறது. பட்டம் படிப்பு முடித்துவிட்டு வருபவர்களுக்கு தாய்மொழியில் எழுத படிக்க தெரியவில்லை. முதலாளிகளின் லாபம் ஈட்டு சந்தையாக கல்வியாக மாற்றிவிட்டார்கள். மக்கள் பிரச்னை ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.

தமிழகத்தில் 2500 பள்ளிகளை மூடிவிட்டு, கல்வி துறையில் சாதனை என கூறுவது எப்படி சரியாக இருக்கும்?


கட்டத்திற்கு பெயர் வைத்தால் சமூக நீதி வந்துடுமா? ஏதும் கருத்தை சொல்லி கைத்தட்டு வாங்கிட வேண்டும். அதிமுக ஆட்சியில் வெளிநாடு முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? கல்வி மாநாடு அரங்கத்தில் நடக்கிறது. 24ம் தேதிக்குள் சித்தராமையா ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து முடிக்க சொல்கிறார். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு குற்றம் சாட்டி விடுவது? மத்திய அரசு நிதி தரவில்லை என்று சொல்கிறார்கள்.

இரண்டு பாயிண்ட்

40 பார்லிமென்ட் எம்பிக்கள் எதற்கு? திமுகவில் இரண்டு இடலி எடுத்துவிட்டார். அதிமுகவில் இரண்டு தோசை எடுத்துவிட்டார்கள். இரண்டையும் எடுத்து போட்டு உப்புமா கிண்டிவிட்டார். இரண்டையும் சேர்த்து சண்டை செய்து போட்டு சனிக்கிழமை தோறும் கிளம்பிவிட்டார். இதில் மாற்றம் என்ற சொல்லையே அவர் சொல்லவில்லை. மாற்றம் என்றால் என்ன? அவர் நாளைக்கு கரூர் வந்து, நாமக்கல் இரண்டு பாயிண்ட் பேசுவார். சாத்தியம் இல்லாததை சாத்தியப்படுத்துவதற்கு பெயர் தான் சாத்தியம். சொன்னார்களே, செய்தார்களா இது எல்லாம் பிரசாரம் கிடையாது. இவ்வாறு சீமான் கூறினார்.

ஆப்ரிக்க நாட்டு சீமான்!

இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: என்னடா நடக்குது இங்க? நாங்கள் என்ன எழுதிவைத்து பார்த்து படிப்பவர்களா? உலக அரசியலை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு திரிகிறோம். சும்மா தொழில்வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. வெறும் 35 வயது உள்ள சின்னப் பையன் இப்ராஹிம் த்ராரே (ஆப்ரிக்க நாடான புர்கினோ பாசோ அதிபர்) நான் பேசியதை பேசுகிறான்.
அந்த ஊர் சீமான் என்கின்றனர். இங்கே என்னை பார்த்து சிரிக்கிறீர்கள். மரங்களின் மாநாடு போட்ட போது சிரித்தீர்கள். இப்போது அலையாத்தி காடுகள் மாநாடு போடுகிறாய். இப்போது மட்டும் பனைமரம் சாதி மரமில்லாமல் சமூகநீதி மரமாகிவிடுமா? சீமான் சொன்னால் சிரிக்கிறது. சினிமாகாரன் சொன்னால் ரசிப்பது? இவ்வாறு சீமான் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us