கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
UPDATED : செப் 26, 2025 02:35 PM
ADDED : செப் 26, 2025 11:53 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் பிரகாஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் அண்ணாமலை என்பவர் நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குறி தவறி பக்கத்து வீட்டு இளைஞர் பிரகாஷ் தலையில் குண்டு பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்தார். குறி தவறியதில், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.