Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மும்பையில் குண்டு வெடிப்பு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு

மும்பையில் குண்டு வெடிப்பு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு

மும்பையில் குண்டு வெடிப்பு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு

மும்பையில் குண்டு வெடிப்பு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு

ADDED : ஜூலை 14, 2011 10:06 PM


Google News
ஊட்டி : மும்பையில் குண்டு வெடித்ததன் எதிரொலியாக, நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் குண்டு வெடித்து 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதன் எதிரொலியாக, சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா மையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் தொடர் வாகன சோதனை நடந்து வருகிறது. ஊட்டி லவ்டேல் சந்திப்பில், டி.எஸ்.பி., அசோக்?குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பிற பகுதிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. மாநில எல்லைகளான கக்கனல்லா, நாடுகாணி உட்பட 13 முக்கிய சோதனை சாவடிகளிலும் இரவு நேரத்திலும் தீவிர சோதனை பணிகள் நடந்து வருகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us