ADDED : ஆக 05, 2011 01:44 AM
கோத்தகிரி : கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலர்
ராஜன், தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில நுகர்வோர் கூட்டமைப்புகளின் மாநில
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில்,
நுகர்வோர் பாதுகாப்பு குழு கூடுதல் செயலர் போஜன் வரவேற்றார்.
தலைவர்
பசுவராஜ் தலைமை வகித்தார். இட்டக்கல் குரூப் தலைவர் தொழிலதிபதர் போஜராஜன்
முன்னிலை வகித்தார்.இதில், பெட்காட் மாவட்ட செயலர் தருமலிங்கம், குன்னூர்
நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலர் சபாபதி உட்பட தன்னார் அமைப்பின்
பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். நிர்வாகி வைரமணி நன்றி கூறினார்.