/உள்ளூர் செய்திகள்/தேனி/கண்மாய்கள் ஆக்கிரமிப்பு : நிலத்தடி நீர்மட்டம் குறைவுகண்மாய்கள் ஆக்கிரமிப்பு : நிலத்தடி நீர்மட்டம் குறைவு
கண்மாய்கள் ஆக்கிரமிப்பு : நிலத்தடி நீர்மட்டம் குறைவு
கண்மாய்கள் ஆக்கிரமிப்பு : நிலத்தடி நீர்மட்டம் குறைவு
கண்மாய்கள் ஆக்கிரமிப்பு : நிலத்தடி நீர்மட்டம் குறைவு
ADDED : ஜூலை 25, 2011 10:26 PM
போடி : போடி பகுதியில் கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
போடி அருகே உள்ள கொட்டகுடி ஆறு பாய்ந்து வரும் கரையோரங்களில் மட்டும் இருபோக சாகுபடி நடக்கிறது. பருவமழையை நம்பி ஆயிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் குளங்கள், கண்மாய்களில் தேங்கும்நீர் மூலம் நிலத்தடி நீர் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு மழையில்லாததால் குளம், கண்மாயில் தேங்கும் சிறிதளவு நீரும் வற்றி விடுகிறது. போடியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் நீரின் அளவும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மழைநீர் சேமிப்பு கண்மாய்கள், குளங்கள் குடியிருப்பு பகுதிகளாகவும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியுள்ளது. மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் கொட்டகுடி ஆற்றில் மிகவும் குறைந்தளவு நீரே செல்கிறது. இதனால் கண்மாய்களில் நீரை சேமிக்க முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.