/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மூவருக்கு அரிவாள் வெட்டுநிலத்தகராறில் இருவர் கைதுமூவருக்கு அரிவாள் வெட்டுநிலத்தகராறில் இருவர் கைது
மூவருக்கு அரிவாள் வெட்டுநிலத்தகராறில் இருவர் கைது
மூவருக்கு அரிவாள் வெட்டுநிலத்தகராறில் இருவர் கைது
மூவருக்கு அரிவாள் வெட்டுநிலத்தகராறில் இருவர் கைது
ADDED : ஜூலை 11, 2011 02:45 AM
உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே நிலத்தகராறில் கணவன், மனைவி உட்பட
மூவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.உடையார்பாளையம்
அருகே உள்ள ஒக்கனத்தம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (45).
இவருக்கும்
அதே ஊரைச் சேர்ந்த இளமாரனுக்கும் நிலப்பிரச்னை, பணம் கொடுக்கல், வாங்கல்
இருந்து வந்துள்ளது.இந்நிலையில், இளமாறன் (46), இவரது உறவினர்களான
சிவசுப்பிரமணியன், கோவிந்தராஜ் (62) ஆகியோர் சேர்ந்து இளங்கோவன், அவரது
மனைவி வளர்மதி (40), மகள் காந்திமதி (22) ஆகியோரை அரிவாளால்
வெட்டினர்.காயமடைந்த காந்திமதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். இளங்கோவன், வளர்மதி ஆகியோர் தஞ்சை மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து வந்தபுகாரின் பேரில்,
உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து இளமாறன்,
கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.