/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வளர்ச்சியில்லாத வேளாண் கல்லூரி: சந்திரகாசு வேதனைவளர்ச்சியில்லாத வேளாண் கல்லூரி: சந்திரகாசு வேதனை
வளர்ச்சியில்லாத வேளாண் கல்லூரி: சந்திரகாசு வேதனை
வளர்ச்சியில்லாத வேளாண் கல்லூரி: சந்திரகாசு வேதனை
வளர்ச்சியில்லாத வேளாண் கல்லூரி: சந்திரகாசு வேதனை
ADDED : ஆக 29, 2011 10:55 PM
காரைக்கால்: காரைக்கால் வேளாண் கல்லூரியில் வளர்ச்சி இல்லை என வேளாண் அமைச்சர் சந்திரகாசு கூறினார்.
காரைக்கால் செருமாவிளங்கை, காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் தம்பிதுரை வரவேற்றார். மின்திறள் குழும சேர்மன் சிவா எம்.எல்.ஏ., நாஜிம் எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் அமைச்சர் சந்திரகாசு பேசுகையில், எந்தத் திட்டத்தை முதல்வரிடம் கொண்டு சென்றாலும் நிறைவேற்றி தருகிறார். காமராஜர் பொறியியல் கல்லூரிக்கு தேவையான ரூ. 14 கோடி நிதியை தருவதாக கூறியுள்ளார். அருகில் உள்ள பஜன்கோ வேளாண் கல்லூரியில் வளர்ச்சி இல்லை.எதிர்காலத்தில் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரி வளர்ச்சி பெறும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் வளர்ச்சிக்காக 5 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம். காரைக்கால் எம்.எல்.ஏ.,க்கள், புதுச்சேரிக்குச் சென்றால் எந்தத் திட்டத்தை காரைக்காலுக்கு கொண்டு வரலாம் என அலைந்து திரிகின்றனர். பொறியியல் கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட சில பேராசிரியர்கள், ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் குமார் நன்றி கூறினார்.
அமாவாசையில் வகுப்பு துவக்கம் : அமாவாசை தினத்தில் எந்த காரியத்தை துவக்கினாலும் சிறப்பாக முடியும் என்பதால், நேற்றுமுன்தினம் ஞாயிற்று கிழமையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.