/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மனைவி கண்முன் நீரில் மூழ்கிபுதுமாப்பிள்ளை பரிதாப பலிமனைவி கண்முன் நீரில் மூழ்கிபுதுமாப்பிள்ளை பரிதாப பலி
மனைவி கண்முன் நீரில் மூழ்கிபுதுமாப்பிள்ளை பரிதாப பலி
மனைவி கண்முன் நீரில் மூழ்கிபுதுமாப்பிள்ளை பரிதாப பலி
மனைவி கண்முன் நீரில் மூழ்கிபுதுமாப்பிள்ளை பரிதாப பலி
ADDED : செப் 08, 2011 12:07 AM
தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் யூனியன் சீலைப்பிள்ளையார்புதூரில்
ஆற்றில் குளித்த புதுமாப்பிள்ளை மனைவி கண் முன்னே நீரில் மூழ்கி பலியானார்.
மருதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(27). இவரது மனைவி நிர்மலா(19).
இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. விஜய்
தனது மனைவியுடன் தற்போது சென்னை தாம்பரம் தானித்தோனி சித்தி விநாயகர்
கோவில் தெருவில் வசித்து ஹோட்டல் நடத்தி வந்தனர்.மருதம்பட்டியில் உள்ள
சஞ்சீவி பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்காக தனது மனைவி நிர்மலா மற்றும்
உறவினர்களுடன் தாம்பரத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தவர்
சீலைப்பிள்ளையார்புத்தூர் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து வருவதற்காக
குடும்பத்துடன் விஜய் சென்றுள்ளார்.
காவிரியில் விஜய் அவரது மனைவி நிர்மலா
ஆகியோர் இறங்கி குளித்துவிட்டு தண்ணீர் எடுக்கும்போது நீரில் மூழ்கினர்.
நீச்சல் தெரியாததால் இருவரும் காவிரி ஆற்று சூழலில் சிக்கி
மூழ்கினர்.அருகில் இருந்த உறவினர்கள் நிர்மலாவை மட்டும் காப்பாற்றினர்.
ஆனால், விஜய் சூழலில் சிக்கி மனைவி கண் முன்னே பலியானார்.இதுகுறித்து
மாமனார் வீரபத்திரன் காட்டுப்புத்தூர் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில்,
எஸ்.ஐ., முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விஜயின் உடலை பிரேத
பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை
மேற்கொண்டுள்ளார்.