ADDED : அக் 03, 2011 12:14 AM

ஆமதாபாத் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவர் பிறந்த இடமான, போர்பந்தரில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காந்தி பிறந்த இடமான, குஜராத் மாநிலம் போர்பந்தரில், சர்வமத கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். காந்தி ஜெயந்தி குறித்து, மோடி கூறுகையில், 'மகாத்மா காந்தியால், குஜராத் மாநிலத்துக்கு, மிகப் பெரிய பெருமை கிடைத்துள்ளது. அவரின் கொள்கைகளை அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற வேண்டும்' என்றார்.


