உள்ளாட்சி தேர்தலில் நேரடி ஓட்டெடுப்பு: மார்க்சிஸ்ட் விருப்பம்
உள்ளாட்சி தேர்தலில் நேரடி ஓட்டெடுப்பு: மார்க்சிஸ்ட் விருப்பம்
உள்ளாட்சி தேர்தலில் நேரடி ஓட்டெடுப்பு: மார்க்சிஸ்ட் விருப்பம்
ADDED : ஆக 20, 2011 08:11 PM
மதுரை:''உள்ளாட்சி தேர்தலில் நேரடி ஓட்டெடுப்பு மூலம் தலைவர்கள் தேர்வாகும் முறை அமல்படுத்த வேண்டும்,'' என, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: அன்னா ஹசாரே கருத்தை வலியுறுத்தி, ஆக.,23ல் கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டத்தை ஆதரிக்கிறோம்.
தமிழகத்தில் பிற கட்சிகளிடம் பேசி வருகிறோம். ஊழலுக்கு எதிராக செப்.,2ல் பார்லி., முன்பு ஆர்பாட்டம் செய்ய கம்யூ.,கள் முடிவு செய்துள்ளனர். 'மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை,' என, முதல்வர் ஜெ., கூறியதை, காங்., தலைவர் தங்கபாலு விமர்ச்சித்துள்ளார். 'போதிய நிதி தருவதாகவும், மாநில அரசுகள் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது,' என, கூறியுள்ளார். இது ஏற்க முடியாதா கருத்து. மத்திய அரசு நியமித்த 13வது நிதி ஆணையக்குழு, 'தனக்கு கிடைக்கும் வரியில்லா வருமானத்தின் பாதியை மாநில அரசுக்கு வழங்க,' மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதை அமல்படுத்தவில்லை. இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும். புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்கும் அறிவிப்பு வரவேற்கக்கூடியது. தி.மு.க., ஆட்சியில் பட்டா கேட்டு 25 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அ.தி.மு.க., அரசு உதவ வேண்டும். தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை கணக்கெடுக்கும் குழு அமைக்க வேண்டும். நிலமில்லா ஏழைகளுக்கு வழங்க வேண்டும். திருப்பூரில் 2009ல் 542, 2010ல் 535, 2011 ஜூலை வரை 350 பேர் தற்கொலை செய்துள்ளனர். தடுக்க முயற்சிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம். மாநில அரசு பொறுப்பல்ல. உள்ளாட்சி தேர்தலில் நேரடி ஓட்டெடுப்பில் தலைவர்கள் தேர்வாக வேண்டும். கவுன்சிலர்கள் கடத்தப்படுவதை தடுக்கலாம். மதுரை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் கொட்டக்காய்ச்சியேந்தல் ஊராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது, என்றார்.