Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/3 மாதங்களில் தமிழகத்துக்கு 7.84 லட்சம் பறவைகள் வருகை

3 மாதங்களில் தமிழகத்துக்கு 7.84 லட்சம் பறவைகள் வருகை

3 மாதங்களில் தமிழகத்துக்கு 7.84 லட்சம் பறவைகள் வருகை

3 மாதங்களில் தமிழகத்துக்கு 7.84 லட்சம் பறவைகள் வருகை

UPDATED : மே 23, 2025 11:30 AMADDED : மே 23, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
சென்னை:'தமிழகத்தில் இந்த ஆண்டு, 798 வகைகளை சேர்ந்த, 7.84 லட்சம் பறவைகள் வருகை தந்தன' என, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு, வனத்துறையால் நடத்தப்படும்.

இந்த ஆண்டு 38 மாவட்டங்களில், 934 இடங்களில் நீர் பறவைகள் கணக்கெடுப்பும், 1,093 இடங்களில் நில பறவைகள் கணக்கெடுப்பும் நடந்தன.

நீர் நிலைகளில் 397 வகைகளை சேர்ந்த 5 லட்சத்து 52,349 பறவைகள் வருகை பதிவானது.

அதில், 136 வகைகளை சேர்ந்த, 1 லட்சத்து 13,606 பறவைகள், வெளிநாடுகளில் இருந்து வந்தவை.

நிலப்பகுதிகளில் 401 வகைகளை சேர்ந்த, 2 லட்சத்து 32,519 பறவைகள் வந்தன. அதில், 118 வகைகளை சேர்ந்த 17,670 பறவைகள் வெளிநாடுகளை சேர்ந்தவை.

பறவைகள், புலிகள், யானைகள், வரையாடு கள் கணக்கெடுப்பு மூலமாக தெரியும் விபரங்களின் அடிப்படையில், சூழலியல் சார்ந்த மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும் என வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு கூறினார்.

Image 1421812


Image 1421813






      Our Apps Available On




      Dinamalar

      Follow us