/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நைனார்மண்டபத்தில் சீரழிந்து கிடக்கும் ஊழியர்கள் குடியிருப்பு சிறுவர் பூங்காநைனார்மண்டபத்தில் சீரழிந்து கிடக்கும் ஊழியர்கள் குடியிருப்பு சிறுவர் பூங்கா
நைனார்மண்டபத்தில் சீரழிந்து கிடக்கும் ஊழியர்கள் குடியிருப்பு சிறுவர் பூங்கா
நைனார்மண்டபத்தில் சீரழிந்து கிடக்கும் ஊழியர்கள் குடியிருப்பு சிறுவர் பூங்கா
நைனார்மண்டபத்தில் சீரழிந்து கிடக்கும் ஊழியர்கள் குடியிருப்பு சிறுவர் பூங்கா
ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : சீரழிந்து கிடக்கும் நைனார்மண்டபம் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பூங்காவை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நைனார்மண்டபம் பகுதியில் சுகாதார ஊழியர்கள் சங்கம் மூலம், கடந்த 1990ம் ஆண்டு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு ஒரு பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, புதுச்சேரி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின், நகராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் பூங்காவைச் சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், இங்கிருந்த ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பயனற்ற நிலையில் உள்ளன. மேலும், உட்காருவதற்காக அமைக்கப்பட்ட பெஞ்சுகள் முற்றிலுமாக உடைந்து விட்டன. பூங்காவினுள் புதர் மண்டியுள்ளதால், கால்நடைகள் திரிகின்றன. இவற்றின் கழிவுகளால் பூங்காவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாடவோ, பெரியவர்கள் ஓய்வெடுக்கவோ செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பூங்காவை சரி செய்ய வேண்டும்.