/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சுகாதாரத்தை காக்க தனி கழிப்பறை : பாவாலி ஊராட்சி தலைவர் வேட்பாளர்சுகாதாரத்தை காக்க தனி கழிப்பறை : பாவாலி ஊராட்சி தலைவர் வேட்பாளர்
சுகாதாரத்தை காக்க தனி கழிப்பறை : பாவாலி ஊராட்சி தலைவர் வேட்பாளர்
சுகாதாரத்தை காக்க தனி கழிப்பறை : பாவாலி ஊராட்சி தலைவர் வேட்பாளர்
சுகாதாரத்தை காக்க தனி கழிப்பறை : பாவாலி ஊராட்சி தலைவர் வேட்பாளர்
ADDED : செப் 30, 2011 01:29 AM
விருதுநகர் : ''சுகாதாரத்தை காக்க தனி கழிப்பறை அமைக்கப்படும் ,''என,பாவாலி ஊராட்சி தலைவர் வேட்பாளர் கே.
நாகராஜன் கூறினார்.விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சி தலைவர் பதவிக்கு கே. நாகராஜன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த இவர் கூறியதாவது: பாவாலி ஊராட்சி எல்லப்பட்டி, சீனியாபுரம், சொக்கலிங்காபுரம், சந்திரகிரிபுரம், சங்கரநாராயணபுரம், அய்யனார் நகர், கலைஞர் நகர், மேட்டுபட்டி, பராசக்கி நகர், ஆனைகுழாய் முத்துராமலிங்கம் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளான தரமான ரோடுகள் போடப்பட்டு, பஸ் வசதி செய்து தருவேன். திருடர்கள் பயமின்றி வாழ இப்பகுதியில் இரவு காவலர் நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்.
பள்ளி குழந்தைகள் கல்வி கற்க, ஆசியர்கள் பற்றாக்குறையை நீக்கி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். குடி தண்ணீர் தினமும் கிடைக்க ஏற்பாடு செய்வேன், தெரு விளக்குகள் எரிவதற்கும், சாக்கடை கழிவுநீர் செல்வதற்கும் முன்னுரிமை வழங்குவேன். தினமும் வீடுகள் தோறும் குப்பைகள் அள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதரமின்மையை தடுக்க ஊர்கள் தோறும் ஆண், பெண்களுக்கு தனி கழிப்பறை கட்டி கொடுக்கப்படும். இப்பகுதி மக்கள் எப்போது வேண்டுமானலும் என்னை தொடர்பு கொள்ளலாம், என்றார்.