/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.,- தே.மு.தி.க., அதிக ஆர்வம் :தனித்து போட்டி பா.ம.க.,பின்னடைவுஉள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.,- தே.மு.தி.க., அதிக ஆர்வம் :தனித்து போட்டி பா.ம.க.,பின்னடைவு
உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.,- தே.மு.தி.க., அதிக ஆர்வம் :தனித்து போட்டி பா.ம.க.,பின்னடைவு
உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.,- தே.மு.தி.க., அதிக ஆர்வம் :தனித்து போட்டி பா.ம.க.,பின்னடைவு
உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.,- தே.மு.தி.க., அதிக ஆர்வம் :தனித்து போட்டி பா.ம.க.,பின்னடைவு
ADDED : செப் 17, 2011 01:22 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
தனித்து போட்டி என அறிவித்த பா.ம.க., வில் தேர்தல் போட்டிக்கான விருப்ப மனுக்கள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை பொறுத்த வரையில் ஒரு நகராட்சி தலைவர், 33 நகராட்சி கவுன்சிலர், 10 டவுன் பஞ்சாயத்து, 18 மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள் 188 பேர், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 251 பேர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 2,220 தற்போது கிராம பஞ்சாயத்தில் ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் முறை என சீரமைப்பு செய்யப்பட்டதால், வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கூட்டணியை பொறுத்த வரையில் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும் நிலையுள்ளது. தி.மு.க., தனித்து போட்டி என அறிவித்த நிலையில் அக்கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகிய நிலையில் அக்கட்சியும் தனித்து போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளது. கடந்த முறை தி.மு.க., கூட்டணி வலுவான கூட்டணி பலத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது, தனித்து போட்டி என்பதால் அக்கட்சியினர் மத்தியில் போட்டிக்கான ஆர்வம் குறைந்திருந்தாலும், அதை வெளி காட்டி கொள்ளாமல் ஜாதிய பலம் உள்ள வார்டுகளை குறி வைத்து அக்கட்சியினர் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். வன்னியர் சமூக மக்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் தனித்து போட்டியினால், சாதித்து விடலாம் என எதிர்பார்ப்புடன் பா.ம.க.,வினர் களம் இறங்க நினைத்த போதும், அக்கட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு விருப்ப மனுக்கள் வரவில்லை என்பது அக்கட்சியினர் மத்தியில் வேதனையை கொடுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சியினர் அதிக ஆர்வத்துடன் தேர்தலை சந்திக்க விறுவிறுப்புடன் உள்ளனர். அ.தி.மு.க.,வில் 1,370 பேர் தேர்தல் போட்டிக்கு விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர். தி.மு.க.,விலும் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர். தே.மு.தி.க.,வில் மொத்தம் 1,517 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பா.ம.க.,வில் 332 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இது தவிர விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளில் தேர்தல் போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பும், போட்டியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் தனித்து போட்டி என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், கடந்த தேர்தலில் எளிதாக வெற்றி பெற்ற கட்சிகள் இந்த முறை தலைகீழ் மாற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.