லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
ADDED : ஜூன் 14, 2025 05:19 PM

லண்டன்: தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆஸி., அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், ' நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன்கள் எடுத்தன.
மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ' ஆல் அவுட்' ஆனது. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம்(102), பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர்.
4வது ஆட்ட நாள் துவங்கியதும் பவுமா, கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து 66 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டிரிஸ்ட்ன் ஸ்டப்ஸ் 8 ரன்களிலும் அவுட்டாகினர்.
இருப்பினும் மார்க்ரம், டேவிட் பெடின்ஹம் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். மார்க்ரம் 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.