/உள்ளூர் செய்திகள்/தேனி/கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்புகண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 20, 2011 10:19 PM
வருஷநாடு:கடமலை-மயிலை ஒன்றியம், நரியூத்து ஊராட்சிக்கு உட்பட்ட செங்குளம்
கண்மாய் சுமார் 147 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது.இக்கண்மாயினை சில
ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இலவமரம், கொட்டை முந்திரி,
தென்னை சாகுபடி விவசாயம்,மற்றும் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.
இதனால்
மழைக்காலங்களில் போதுமான தண்ணீரைத் தேக்கி வைக்க
முடியவில்லை.தங்கம்மாள்புரம், நரியூத்து, செங்குளம் ஆகிய பகுதி விவசாய
கிணறுகளில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இக்கண்மாயினை
சுற்றியுள்ள மானாவாரி விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். ஆக்கிரமிப்புகளை
அகற்ற வேண்டும் என விவசாயிகளின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு
தந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.