மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்
மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்
மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 02:10 PM
மதுரை: உள்ளாட்சித்தேர்தலுக்காக மதுரை மேயர் வேட்பாளராக தே.மு.தி.க.
சார்பில் இன்று கவியரசு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் உள்ளிட்ட 6 ஆறுபேர் தேர்தல் அலுவலகத்தில் நுழைந்தனர். தேர்தல் விதிப்படி 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் . ஆனால் 6 பேர் வந்ததாக புகார் கூறப்பட்டது. அப்போது தே.மு.தி.க. வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நேற்று அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதிமீறலை தே.மு.தி.க. வினர் சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்தனர் .இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.