Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஓய்வின்றி உழைப்பதால் "திருகுவலி' மாநகர போலீஸார் மனச்சோர்வு

ஓய்வின்றி உழைப்பதால் "திருகுவலி' மாநகர போலீஸார் மனச்சோர்வு

ஓய்வின்றி உழைப்பதால் "திருகுவலி' மாநகர போலீஸார் மனச்சோர்வு

ஓய்வின்றி உழைப்பதால் "திருகுவலி' மாநகர போலீஸார் மனச்சோர்வு

ADDED : செப் 26, 2011 11:52 PM


Google News

திருச்சி: பாதுகாப்பு பணிகள், திருட்டு, கொலை, தேர்தல் பணி என பல்வேறு தொடர் பணிகள் காரணமாக, ஓய்வின்றி உழைக்கும் திருச்சி மாநகர போலீஸார் மனசச்சோர்விலும், திருகுவலியில் சிக்கி தவிக்கின்றனர்.

திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு முடிந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸார் செய்திருந்தனர். முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், உள்ளிட்ட தி.மு.க.,வினர் பலரும் மூன்று நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு பணிக்கும் நூற்றுக்கணக்கில் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர திருச்சி மாநகரில் நடக்கும் செயின்பறிப்பு மற்றும் பூட்டியிருக்கும் வீட்டு கதவை உடைத்து திருடுவது அதிகம் நடக்கிறது. இவற்றை கண்டுபிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியிலும் மாநகர போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். தவிர, சமீபத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொலைகள் தொடர்பாக துரித விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர திருச்சி மாநகரில் தினந்தோறும் ஏதாவது ஒரு கட்சியோ, அரசியல் அமைப்போ, இதர அமைப்புகளோ ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்துகிறது.



இவற்றுக்கும் மாநகர போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டியுள்ளது. இப்படியாக பல்வேறு பணிச்சுமைகளில் தொடர்ந்து பணியாற்றும் மாநகர போலீஸார் மிகுந்த மனசோர்வுக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு துவங்கிவிடும் என்பதால், மாநகர போலீஸாருக்கு பாதுகாப்பு பணி என்பது பெரும் திருகுவலியாக மாறியுள்ளது. ஆகையால் மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், போலீஸாரின் மனச்சோர்வை போக்கி, புத்துணர்ச்சி அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us