3 முறை அழைக்கும் கோர்ட் நடைமுறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு திட்டம்
3 முறை அழைக்கும் கோர்ட் நடைமுறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு திட்டம்
3 முறை அழைக்கும் கோர்ட் நடைமுறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு திட்டம்
ADDED : ஜூலை 05, 2024 05:18 PM

பெங்களூரு: நீதிமன்றங்களில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் பெயர்களை, மூன்று முறை உரத்த குரலில் அழைக்கும், பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, சட்டத் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: தற்போதுள்ள சட்டத்தின்படி, நீதிமன்றங்களில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளை, மரியாதை இன்றி உரத்த குரலில் அழைக்கும் நடைமுறை உள்ளது. பகிரங்கமாக பெயர் சொல்லி அழைப்பதால், அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. நியாயம் கேட்டு, நீதிமன்றத்தை நாடுபவர், நியாயத்தை நிலைநாட்ட நீதிமன்றத்துக்கு உதவும் நோக்கில், சாட்சியம் அளிக்க வருவோரை கவுரவத்துடன் நடத்த வேண்டும்.
எனவே பெயர் சொல்லி அழைக்கும் பழைய நடைமுறைக்கு, முடிவு கட்ட அரசு முன் வந்துள்ளது. இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. சட்டம் மற்றும் கொள்கைகள் - 2023க்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. விசாரணை நேரத்தில், குற்றவாளி கூண்டுகளில், சாட்சிகள், குற்றவாளிகள் அமர்ந்து கொள்ள வசதி செய்வது உட்பட பல மேம்பாடுகள் திருத்த சட்டத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.