/உள்ளூர் செய்திகள்/தேனி/தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகவுன்சிலிங் நடத்துவது எப்போது?தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகவுன்சிலிங் நடத்துவது எப்போது?
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகவுன்சிலிங் நடத்துவது எப்போது?
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகவுன்சிலிங் நடத்துவது எப்போது?
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகவுன்சிலிங் நடத்துவது எப்போது?
ADDED : செப் 25, 2011 09:46 PM
தேனி:தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கவுன்சிலிங் நடத்தப்படாததால், அரசு
பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை உள்ளது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலை,
மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங்
முடிந்துள்ளது. இவற்றுடன் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்
நடத்தப்படவில்லை. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 400 அரசு பள்ளிகளிலும், தரம்
உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது.