/உள்ளூர் செய்திகள்/தேனி/கொசு தொல்லை: தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தில் கூடலூர் ஓடைத்தெரு மக்கள்கொசு தொல்லை: தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தில் கூடலூர் ஓடைத்தெரு மக்கள்
கொசு தொல்லை: தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தில் கூடலூர் ஓடைத்தெரு மக்கள்
கொசு தொல்லை: தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தில் கூடலூர் ஓடைத்தெரு மக்கள்
கொசு தொல்லை: தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தில் கூடலூர் ஓடைத்தெரு மக்கள்
ADDED : செப் 21, 2011 11:04 PM
கூடலூர் நகராட்சி 6வது வார்டில் உள்ளது ஓடைத்தெரு.
நகரின் கிழக்கு கடைசியில் அமைந்துள்ள இப்பகுதியில், சாக்கடை நீர் முழுவதும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. நகராட்சி பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர் முழுவதும் இங்கு வந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் ஏராளமாக உற்பத்தியாகின்றன.நகராட்சியில் வேலை செய்யும் துப்பரவு பணியாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், நகராட்சியின் அனுமதியின்றி சாக்கடை மற்றும் குப்பைகளை அள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில், நகர்பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் முழுவதும் கழிவு நீர் ஓடைவழியாக காட்டாற்று வெள்ளம் போல் வந்து, இங்குள்ள குடியிருப்பில் நுழைந்து விடுகிறது. இதனால் மழை காலங்களில் வசிக்க முடியாமல் தொடர்ந்து இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள மிகப்பெரிய கழிவு நீரோடையில் தேங்கி நிற்கும் சாக்கடையால் தினந்தோறும் துர்நாற்றத்தில் வசித்து வருகின்றனர். கழிவு நீரோடைக்கு மேல்பகுதியில் மூடுகல் போட பல முறை நடவடிக்கை எடுத்தும் கானல் நீராகவே உள்ளது. பொதுமக்களின் கருத்து:எம்.பாப்பா:குடிநீர் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. அருகில் உள்ள வார்டுகளில் குடிநீர் சப்ளையை தொடர்ந்து செய்யும் நகராட்சி நிர்வாகம் ஓடைத்தெருவை புறக்கணித்து விட்டது போல் உள்ளனர். குடிநீருக்காக நீண்ட தூரம் செல்லும் நிலை இருப்பதால், கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜி.பிரபாகரன்: வீடுகளில் குடியிருக்க முடியாத வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது. மழை நேரங்களில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழை நீரும் வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால், தொற்று நோய் பரவி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில ரோடுகளை மட்டும் சீரமைத்த நகராட்சி நிர்வாகம், கழிவு நீரை வெளியேற்ற முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.பி.கன்னியம்மாள்: குடியிருப்பு பகுதிக்கு நடுவில் செல்லும் கழிவு நீர் ஓடையில் மூடுகல் போட பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவதோடு சரி, நடவடிக்கை இதுவரை இல்லை. குடிநீர் சப்ளை மூன்று மாதங்களாக இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். குடிநீர் பைப் முழுவதும் கழிவு நீரோடை அருகிலேயே அமைந்துள்ளது. கழிவு நீரோடையில் குவியும் பன்றிகள் குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நமது சிறப்பு நிருபர்