/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இடைத்தேர்தல் எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து :திருச்சி கலெக்டர் அறிவிப்புஇடைத்தேர்தல் எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து :திருச்சி கலெக்டர் அறிவிப்பு
இடைத்தேர்தல் எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து :திருச்சி கலெக்டர் அறிவிப்பு
இடைத்தேர்தல் எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து :திருச்சி கலெக்டர் அறிவிப்பு
இடைத்தேர்தல் எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து :திருச்சி கலெக்டர் அறிவிப்பு
ADDED : செப் 09, 2011 02:09 AM
திருச்சி: 'திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது' என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் சிக்கி இறந்ததை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற 'திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்' என கடந்த 6ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்தது. இது அக்டோபர் மாதம் 19ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், அதுவரை வாராந்திர குறைதீர் கூட்டம், சிறப்பு மனுநீதி நாள் முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது. அதே நேரத்தில் மக்களின் குறைகளை களைய கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்படும். அதில், தங்களின் குறை, பிரச்னை குறித்து மனுக்கள் எழுதி போடலாம். அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ தெளிவித்துள்ளார்.