/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஊரக வளர்ச்சித் துறைகூடுதல் இயக்குனர் ஆய்வுஊரக வளர்ச்சித் துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு
ஊரக வளர்ச்சித் துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு
ஊரக வளர்ச்சித் துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு
ஊரக வளர்ச்சித் துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு
ADDED : செப் 07, 2011 10:56 PM
பண்ருட்டி:பண்ருட்டி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர்
ராஜாமணி நேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் ராஜாமணி நேற்று பண்ருட்டி,
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளான நத்தம், செம்மேடு,
பனிக்கன்குப்பம், கள்ளிப்பட்டு, கணிசப்பாக்கம், கண்டரக்கோட்டை பகுதிகளில்
ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் சுகாதார வளாகம், சாலை வசதி, தேசிய ஊரக வேலை
உறுதியளிப்புத் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு ஆகிய வளர்ச்சிப்
பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திட்ட இயக்குனர் சீனுவாசன், உதவி
இயக்குனர் குமுதா, பி.டி.ஒ.,க் கள் துரை, தமிழரசி, மனோகரன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.