சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!
சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!
சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!


மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம்:
கேளம்பாக்கம் - 10.3 செ.மீ.,அடையாறு - 10.1 செ.மீ.,எழும்பூர் - 9.20 செ.மீ.,திருவொற்றியூர் - 8.90 செ.மீ.,கத்திவாக்கம் - 8.7 செ.மீ.,கிண்டி - 8.6 செ.மீ.,
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணிக்கு நீர் இருப்பு 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 73,330 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9 மணி முதல் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்:
சோலையார் அணை
நீர்மட்டம்: 161.07/160 அடிநீர்வரத்து: 2189.62 கன அடிவெளியேற்றம்: 2412.77 கன அடி
பரம்பிக்குளம் அணை:
நீர்மட்டம்: 67.88/72 அடிநீர்வரத்து: 2707 கன அடி.வெளியேற்றம்: 127 கன அடி
ஆழியார் அணை:
நீர்மட்டம்: 119.10/120 அடி.நீர்வரத்து:700 கன அடி.வெளியேற்றம்:538 கன அடி.

உடுமலை திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:28.37/60 அடிநீர்வரத்து: 111 கன அடிவெளியேற்றம்: 26 கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.05/90அடி.நீர்வரத்து:1150 கனஅடிவெளியேற்றம்: 805கன அடி.
17 மாவட்டங்களில் கனமழை கொட்டுமாம்!
இன்று மட்டும் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.