ADDED : செப் 07, 2011 10:28 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிராம மக்கள் பச்சோந்தியை மீட்டு
பாதுகாத்தனர்.திண்டிவனம் அடுத்த ஒழிந்தியாப்பட்டு ரோட்டில் கடந்த 4ம் தேதி
ஒரு பச்சோந்தி ஊர்ந்து சென்றது.
அந்த வழியே சென்ற எறையானூர் கிராமத்தை
சேர்ந்த சுபா வெங்கடேசன், வடிவேல் இருவரும் பச்சோந்தியை மீட்டு,
எறையானூர் கிராமத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். இதை திண்டிவனம் வன
சரக அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.