ADDED : செப் 01, 2011 02:11 AM
மதுரை : ''தொடர்ந்து எட்டாவது முறையாக நம்பிக்கைக்குரிய நிறுவனத்திற்கான விருதை எல்.ஐ.சி., பெற்றுள்ளது,'' என, எல்.ஐ.சி., முதுநிலை கோட்ட மேலாளர் சக்ரபாணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மார்ச் 31 வரை, 30 கோடிக்கும் அதிகமான பாலிசிகளுக்கு எல்.ஐ.சி., சேவை செய்து வருகிறது.
கடந்தாண்டில் 3.70 கோடி பாலிசிகளின் மூலம் ரூ.52ஆயிரத்து 203 கோடி முதல் பிரீமியம் ஈட்டியுள்ளது. ஆயுள்நிதி ரூ.11 லட்சத்து 51ஆயிரத்து 200 கோடியாகவும், சொத்து மதிப்பு ரூ.13 லட்சத்து 17ஆயிரத்து 416 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.5லட்சத்து 28ஆயிரத்து 390 கோடியை தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது. 96 சதவீத பாலிசிகள் முதிர்வுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளன.பாலிசிதாரர்கள் எந்த இடத்திலிருந்தும் சேவையை தொடரும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் கடந்தாண்டு 3.76 லட்சம் பாலிசிகளின் மூலம் ரூ.437.69 கோடி முதல் பிரீமியமும், நடப்பாண்டில் 1.10 லட்சம் பாலிசிகள் மூலம் ரூ.80 கோடி பிரிமீயம் பெறப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான நம்பிக்கைக்குரிய விருதை பெற்று, தொடர்ந்து எட்டாண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. மதுரை கோட்டத்தின் 25 கிளைகளிலும் செப்.,1முதல், இன்சூரன்ஸ் வாரவிழா கொண்டாடப்படுகிறது, என்றார்.